உடற்கல்வி ஆசிரியர்கள் - சீமாச்சு
பள்ளியில் படிக்குங் காலத்தில் நான் சினேகமாகப் பழக முடியாத ஒரு தரப்பு ஆசிரியர்கள் உண்டென்றால் அது உடற்பயிற்சி ஆசிரியர்கள்(பி.டி சார்) தான். எல்லா நாட்களிலும், காலை 9:30 மணிக்கு, பள்ளி முதல் மணி அடித்த உடனேயே பள்ளியின் பிரதான வாயிலில் மீசையை முறுக்கிக் கொண்டு இந்த பி.டி சார்கள் தான் நிற்பார்கள். யார் லேட்டாக வந்தாலும் ஒரு மிரட்டலுடன், சமயத்தில் பிரம்படியுடன் உபசரிப்பு நடக்கும். எனக்கு இவர்களைக் கண்டாலே ஒரு விதமான பயம். கூடுமான வரை இவர்கள் எந்த பக்கம் தென்பட்டாலும் அவர்கள் கண்ணில் படாமல் சுற்றிச் சென்றுவிடுவேன். இப்பொழுதும் நான் படித்த பள்ளிகளுக்குச் சென்றால் 'நீ இந்தப் பள்ளோடத்துலயா படிச்சே' என்று அப்பாவியாகக் கேட்பார்கள்.
முக்கியமாக இரண்டு பி.டி கிளாஸ்கள் வாரத்தில் இருக்கும். ஒன்று வகுப்பறையில் ஒன்று க்ரெளண்டில். எப்படியாவது இரண்டுக்கும் மட்டம் போட்டு விடுவது வழக்கம். எந்த ஓட்டப் பந்தயத்திலும் கலந்து கொண்டது கிடையாது. எந்த பி.டி வகுப்பாய் இருந்தாலும் எண்ணை வழிய முகத்தை வைத்துக் கொண்டு 'ரொம்ப தலை வலி சார்' 'ராத்திரி முழுக்க ஒரே ஜுரம் சார்' என்று ஏதாவது ஒரு காரணம் சொல்லி விட்டு ஜூட். சமயங்களில் லயனில் எல்லோருடனும் உட்காரச் சொல்லி விடுவார். முடிந்தவரை கடைசி ஆளாக உட்கார்ந்து கொண்டு, மடியில் 'கொழும்பு ஸ்டோர்' சாயம் போன மஞ்சள் பையில் உள்ள புத்தக மூட்டையை மடியில் வைத்துக் கொண்டு, க்ரெளண்டில் மிச்சம் மீதியிருக்கிற காஞ்ச புல்லைப் புடுங்கிக் கொண்டு, குனிந்து கொண்டே அடுத்தவன் கைககடியாரத்தில் மணிபார்த்துக் கொண்டு இருப்பது தான் வேலை.
எங்கள் பள்ளியில் உடற்பயிற்சி ஆண்டு விழா நடக்கும் போது க்ரெளண்டே ஜேஜேன்னு இருக்கும். அப்ப மட்டும் தலையைக் காட்டி விடுவது வழக்கம். வருடம் முழுக்க சரியாகப் படிக்காத்தற்காக எல்லா வாத்தியாருங்க கிட்டேயும் திட்டு வாங்கும் கடைசி பெஞ்சு மாணவர்களுக்கு, அன்று கொண்டாட்டம் தான். ஏதாவது ஒரு பரிசு வாங்கி வந்து வகுப்பாசிரியரிடம் நல்ல பெயர் எடுத்து விடுவார்கள். நமக்குத் தான் ஒரு விளையாட்டும் புரியாதே. யார் ஜெயிச்சா-னு தெரியறதே அந்த 1-2-3 டப்பாவில் ஏறும் போது தான் புடி படும். நாமளும் என்றைக்காவது அந்த 1-2-3 டப்பாவில் ஏறிப் பார்த்து விடவேண்டும் என்று ஒரு கனவு இருந்ததென்னவோ உண்மைதான்.
ஒரு நாள் பி.டி மாஸ்டர் ரூமில் அந்த டப்பா தனியாகக் கெடக்கும் போது ஒரு 2 நிமிடம் அதில் ஏறி நின்று பார்த்து விட்டேன். நல்லவேளை பி.டி சாரிடம் மாட்டிக் கொள்ளவில்லை.பள்ளி விட்டு கல்லூரி வந்தவுடன், இந்த தொந்தரவு எல்லாம் இல்லை. மீசை முறுக்கும் பிடி மாஸ்டருக்கும் நமக்கும் சம்பந்தம் கிடையாது. கல்லூரி வாழ்க்கையில் 5 வருடமும் (BS and MS) அவரிடம் ஒரு தடவை கூட பேசியது கூட கிடையாது. இவ்வளவு தூரம் இந்த ஆசிரியர்களை விட்டு ஓடியதன் காரணமோ என்னவோ எல்லாவற்றிற்கும் சேர்த்து ஈடு கட்ட வந்தது ஒரு வாழ்க்கை. நான் MSc படிக்கும் போதிலிருந்து 11 வருடங்கள் காதலித்து சூழ்நிலை சூழ்ச்சிகளால், மணக்க முடியாமல் போன என் அன்பிற்கினிய முதல் காதலி ஒரு உடற்பயிற்சி ஆசிரியரின் செல்ல மகள்!