கொத்தமல்லி இட்லியும் கொத்து புரோட்டாவும்!
திரை விமர்சனம் - ஆட்டோகிரா·ப்
கால ஓட்டத்தில் மனித மனங்களில் புதையுண்டு போன இனிப்பான தருணங்களை தட்டியெழுப்பி தமிழ் மக்களுக்கு ஒரு திரைக்காவியத்தை தந்திருக்கிறார்கள். ஆட்டோகிராப்!
காதலையும் நட்பையும் கண்ணியமாக காமிரா சுருளுக்குள் சிறைப்படுத்தி சின்ன வயது ஞாபகங்களை வயது வித்தியாசமின்றி அசை போட வைத்ததில் இயக்குனர் சேரனுக்கு முழுமையான வெற்றி. ஒரு நல்ல திரைப்படம் என்பது படம் பார்த்த பின்பும், நடக்கும்போதும், பேசும்போதும் நினைவலைகளாக நெஞ்சக்கூட்டில் மோதி நம்மோடு வாழ்க்கை முழுவதும் பயணிக்கவேண்டுமூ. பாசாங்கில்லாத காட்சியமைப்புகளும் தாயை தேடும் கன்றுக் குட்டி போல உற்சாக ஊற்றாய் கேரளத்து பின்னணியில் ஒரு கவிதையாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
பழைய ஞாபகங்களை அடிக்கடி கிளறியபடி மெலிதாகப் பேசும் செந்தில் பாத்திரப் படைப்பு அற்புதம். வாழ்க்கையின் மேடு பள்ளங்களை அனுபவித்த விவேகம் ததும்பும் புன்முறுவல் முகம். கண்ணாடிக்கு பின்னே அவ்வப்போது விரியும் உணர்ச்சிகளை வெளிக்காட்டாத கண்கள். இப்படியாக அழியாத பிம்பமாய் ஆணியடித்து அமர்ந்து கொள்வது மாதிரி எல்லா பாத்திரங்களும் இருப்பது ஒரு ஆச்சரியம். பள்ளிக் கூடத்து தோழியாக வந்து போகும்போதும் சரி, நான்கைந்து பிள்ளைகளோடு குடும்ப பாரத்தின் கனமான ரேகைகளை முகத்தில் படர விட்டுக் கொண்டு சராசரி பெண்மணியாய வரும்போதும் சரி, கமலா கனக் கச்சிதம்.
எல்லோரையும் திருப்திப்படுத்தும் வகையில் ஒரு திரைப்படத்தை எடுப்பது என்பது கஷ்டமான காரியம் என்பதை திரையுலக பிரம்மாக்களுக்கே தெரிந்த விஷயம். பாலா, சேரன் என தொடரும் தமிழ் சினிமாவின் புது முகங்கள் அதை சாமர்த்தியமாக செய்து காட்டும்போது புருவங்கள் உயருகின்றன. ஆட்டோகிராப், எந்த காலத்திற்கும், எந்த வயதினருக்கும் பொருத்தமானது என்பதை சொல்லத் தேவையில்லை.
வணிக நோக்கம் என்கிற சேற்றுக்குள் புதையுண்டு கிடக்கும் தமிழ் சினிமாவை யதார்த்தம் என்கிற புனித நீர் கொண்டு சுத்தம் செய்து மனிதம் என்கிற மகத்தான ஆடையை அணிவித்து அரங்கத்திற்கு கொண்டு வர சேரன் போன்றவர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு தமிழர்கள் தார்மீக ஆதரவை தந்து தோள் கொடுக்க வேண்டியது அவசியம். ஆட்டோகிராப் என்னும் ஆங்கில தலைப்பு நெருடலாக இருந்தாலும் இது போன்ற படங்கள் பார்க்கப்பட வேண்டியது மட்டுமல்லாமல் உணரப்பட வேண்டிய விஷயம் என்றே எனக்கு தோன்றுகிறது. அதே போல வறண்டு கிடக்கும் வயல்களும், வாய்க்கால்களையும் சின்ன வயது ஞாபகங்களாக காட்டும் சேரன், நிகழ்கால காட்சிகளாக காட்டுவது பசுமையும் வனப்பும் சூழ்ந்த பிரதேசங்கள். ஏனிந்த முரண்பாடு?
மனித உணர்வுகளில் அன்பின் குறியீடாகிய காதலுக்கு மட்ம் தனியிடம் உண்டு. அதன் அவஸ்தைகளில் கூட சுகமுண்டு. அதுவே வாழ்க்கையில்லை என்பதை உணர்த்த சேரன் போன்றவர்கள் இன்னொரு முறை புறப்பட்டு வந்து வெற்றிக் கீரிடத்தை மீண்டும் சுமப்பார்கள் என்கிற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.
- ஆதி
திரை விமர்சனம் - கில்லி
தமிழ் புத்தாண்டு முதல் திரையிடப்படடிருக்கும் புதிய திரைப்படங்களில் கில்லியும் ஒன்று. இப்படத்திற்கான ட்ரெயிலரிலேயே ஆங்கிலப்படத்திற்;கு இணையான காட்சிகளையும் பின்னணியில் ஆங்கிலத்தில் காட்சிகளை விவரிக்கும் குரல் ஒன்றையும்ஒலிக்கச்செய்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர்; தரணி. நம் எதிர் பார்ப்பும் வீண் போகவில்லை. ஜாக்கிஜானின் ஆங்கில படமொன்றை ஓடவிட்டு, கணிணியின் துணைக்கொண்டு ஜாக்கிஜானுக்கு பதிலாக விஜயை திரைப்படத்தில் பொருத்தியிருப்பது போன்ற பிரமையை படம் முழுமைக்கும் உணர முடிகிறது.
விருப்பத்திற்கு மாறாக ஒரு பெண்ணை(நாயகியை) மணக்கத்துடிக்கும் அரசியல் பலம் படைபலம் நிரம்பிய ஒருவனிடமிருந்த நாயகன் நாயகியை காப்பாற்றி கைப்பிடிக்கும் என்ற ஒரு வரி...ஸாரி...அரை வரி கதை!
அறுபதுகளிலிருந்து ஆரம்பித்து ஏகப்பட்ட திரைப்படங்கள் இக்கதையை மையமாக வைத்து வந்து விட்ட நிலையில் இந்த திரைப்படத்திற்கு கூட்டம் சேர்க்க அனிமேஷன் காட்சிகளும், தொழில்நுட்பம் வாய்ந்த காமிராவும் டி டி எஸ் சவுண்ட் சிஸ்டமும் உதவியிருக்கின்றன. கார் ரேஸ் போல் நாயகன், நாயகியை கார்கள் துரத்த-துரத்த நாமே காரில் தப்பி செல்வது போன்ற உணர்வு ஆரம்பத்தில் தோன்றுகிறது. ஆனால் அதுவே சற்று நீளமாக போரடிக்க ஆரம்பிக்கிறது.
வித்யாசாகரின் இசையில், இரண்டு பாடல்கள் நன்றாக வந்திருக்கின்றன. பின்னனி இசையில் இரைச்சல் காதை செவிடாக்குகிறது காது தொடர்ந்து நன்றாக கேட்க வேண்டுமே என்று நினைப்பவர்கள் கொஞ்சம் பஞ்சு கொண்டு போகவும்.
திருட்டு வி.சி.டி, டீ.வி. இவற்றை மீறி ரசிகர்களை தியேட்டருக்கு வரவழைக்க தொழில் நுட்பத்தின் உதவியுடன் இயக்குனர் தரணி மெனக்கெட்டிருக்கிறார் அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். விஜய் என்பதற்காகவோ என்னவோ,க்ளோசப் ஷாட்டில் கேமராவைப்பார்த்து தன் திரையுலக எதிரிகளுக்கு அடிக்கடி எச்சரிக்கை விடுக்கிறார்.சமயத்தில் நம்மைத்தான் எச்சரிக்கிறாரோ என்ற பயமும் நமக்கு ஏற்பட்டுவிடுகிறது. காசு கொடுத்து தியேட்டருக்கு சென்று இது போன்ற மிரட்டல்களை வேறு கேட்டு பயப்படவேண்டியிருக்கிறது. நம் நடிகர்கள் இதை எப்போது விடுவார்கள்?
குறிப்பிட வேண்டிய விஷயம் காமடிக்கென்று தனி டிராக் ஏதும் ஒதுக்காமலும் இரட்டைஅர்த்த வசனங்கள் இல்லாமலும் முதல் பாதி படத்தை ஓரளவுக்கு கலகலப்பாக்குகிறார் விஜய் பாராட்டுக்கள். காமிராவின் துரத்தல் வேகமும் பளீரிட வைக்கும் துல்லியமும் ஆச்சர்யம்தான்.
மொத்தத்தில் சாதாரண அரிசி உப்புமாவில் விதவிதமான சமையல் பொருட்கள் போட்டு, வாசனை ஏற்படுத்தி அற்புதமாக்க முயற்சித்துள்ளார் இயக்குநர் தரணி.

<< Home