மொழிபெயர்ப்பு சிறுகதை - மூன்று ஆன்மாக்கள்
செயிண்ட் ஆண்ட்ரூஸ் தீவிலிருந்து புறப்பட்ட மத போதகர்களின் கூட்டம் காலபாகஸ் தீவுக்கப்பால் இருந்த ஒரு சிறு தீவின் கரையோரம் இளைப்பாறுவதற்காக ஒதுங்கி நின்றது. படகில் இருந்து இறங்கியதும் கூட்டத்தின் கண்ணில் பட்டது அந்த மூன்று பேர். தோல் சுருங்கி, கண்கள் சிறுத்து, வெண்தாடி தரையில் புரண்டும், தட்டுத் தடுமாறி தள்ளாடி வந்ததே அவர்கள் வாழ்க்கையின் விளிம்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் வயதினர் என்பதைக் காட்டி விட்டது.
தன்னந்தனியான தீவில் வேறு யாரையும் காண முடியாத பாதிரியார்களின் கூட்டம், அந்த மூத்த வயதோர்களை இப்போது பிரமிப்பாக பார்த்தது. மொழிப் பிரச்சினை எட்டிப் பார்த்தாலும் சைகை மொழி கைகொடுத்தது.
'உங்களோட தினசரி வேலைகள் என்னென்ன?'
'உண்பதும் உறங்குவதும்தான்'
'கடவுள் வழிபாடு உண்டா?'
'எப்போதாவது, தேவைப்படும் நேரத்தில்'
'எப்படி வழிபடுவீர்கள்?'
'மனதிற்கு தோன்றிய வகையில்'
எரிச்சலான பாதிரியார்கள் கூட்டம் வழிபாட்டு முறை பற்றி அவர்களுக்கு பாடம் எடுக்க ஆரம்பித்தது. ஆண்டவனை எவ்வாறு முழந்தாளிட்டு, கைகூப்பி வணங்கி நம் பாவங்களுக்கு மன்னிப்பு கேட்டு... ஆண்டவரே எம்மை ரட்சிக்கவேண்டும் என்று ஜெபித்து வணங்க வேண்டும் என்று சொன்னதோடு நின்றுவிடாமல் சில வசனங்களை போதித்து இனியாவது முறையாக வணங்கும்படி அவர்களை கேட்டுக் கொண்டது கூட்டம்.
தினந்தோறும் பிரார்த்தனைகள், உபதேசங்கள் என்று ஒரு வாரம் கழிந்தது. முதியவர்களும் வழிபாட்டு முறையில் கற்று தேர்ந்துவிட்டதாக நினைத்த பாதிரியார்களின் கூட்டம் அவர்களிடமிருந்து விடைப் பெற்றுக் கொண்டு அடுத்த இலக்கை நோக்கிய நெடிய பயணத்துக்கு தயாரானது.
படகுகள் கரையிலிருந்து விடை பெற்றுக் கொண்டிருக்கும்போதுதான் தலைமை பாதிரியாரின் கண்ணில் அந்த காட்சி தென்பட்டது. அந்த மூன்று முதியவர்களும் சர்வ சாதாரணமாக அலை மோதும் கடலின் நடுவே தலைதெறிக்க ஓடி வந்து கொண்டிருந்தார்கள்.
'குருவே, நீங்கள் சொல்லிக் கொடுத்த போதனைகளை மறந்து விட்டோம். எனவே தயவு செய்து திரும்பவும் ஒருமுறை சொல்லித் தரமுடியுமா?'
ஆச்சரியமான கூட்டத்தை அமைதிப்படுத்திவிட்டு தலைமை பாதிரியார் கேட்டார்.
'அது இருக்கட்டும். முதலில் தண்ணீரின் மீது நடக்கும் வித்தையை நீங்கள் எப்படி கற்றுக் கொண்டீர்கள் என்பதை சொல்லுங்கள்?'
'அது ஆண்டவனுக்குத்தான் தெரியும். உங்களை எப்படியாவது தேடிக் கண்டுபிடித்து நீங்கள் சொன்ன போதனைகளை திரும்ப கேட்க வேண்டுமென்று ஆசைப்பட்டு ஆண்டவனை பிரார்த்தனை செய்தோம்... அப்படியே நடந்தது'
ஆண்டவனின் புகழை பரப்ப தன் வாழ்க்கையையே அர்ப்பணித்த அந்த தலைமை பாதிரியாரின் தலைகுனிந்து நின்றார்.
'நான்தான் தவறு செய்துவிட்டேன். நீங்கள் கடவுளின் அருளை முழுமையாகப் பெற்றவர்கள். உங்களுக்கு போதனைகள் எதுவும் தேவையில்லை. உங்களது வழக்கமான முறையிலேயே ஆண்டவனை பிரார்த்தனை செய்யுங்கள்'
வந்தவர்களும் வணங்கி, விடைபெற்று சென்றவுடன் தனது கூட்டத்தினரை பார்த்து சொன்னார்.
'ஆண்டவனின் அருளைப் பெற அன்பும், நல்ல ஆத்மாவுமே போதும். வெற்றுப் போதனைகளும் பிரச்சாரங்களும் தேவையேயில்லை'
கர்மாக்களின் மூலம் ஆன்மாக்களை தூய்மைப்படுத்துவதுதான் உண்மையான ஆன்மீகம் என்பதை உணர்ந்து கொண்ட கூட்டத்தின் மனநிலையை அறிந்த படகு துடுப்புகளும் தாய்நாட்டின் திசைநோக்கி நகர ஆரம்பித்தன.
லியோ டால்ஸ்டாயின் சிறுகதை தொகுப்பிலிருந்து... தமிழில் மாறன்.

<< Home